தமிழ் (Tamil)

தமிழ் மொழி பேசுபவர்களுக்கான புற்றுநோய் குறித்த தகவல்கள் , ஆதரவு மற்றும்  உதவிகள்  

புற்றுநோய் என்பது உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் துன்பம் விளைவிக்கும் விடயமாகும். ஆனால், உதவிக்கு யாரும் இல்லாமல் நீங்கள் தனித்து விடப்பட்டவர் இல்லை என்பதையும், உங்களுக்கு ஆதரவுதவியளிக்க நாங்கள் இருக்கிறோம்
என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

 புற்றுநோய், அதைத் தடுத்தல், அதற்கான சிகிச்சை மற்றும் ஆதரவுதவி சேவைகள் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள் உள்ள குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கும் எவரொருவரும் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.  

 உங்களுக்கு உதவுவதற்கான பல இலவச ஆதரவுதவி சேவைகள் Cancer Council Victoria விக்டோரிய புற்றுநோய் ஆய்வுக் குழுவிடம் உள்ளனஅவை விக்டோரிய மாநிலத்தின்  எப்பகுதியிலும்  கிடைக்கும்உங்களுக்கு ஏற்ற மற்ற ஆதரவுதவி சேவைகளுடனும் எம்மால் உங்களைத் தொடர்புபடுத்த இயலும். கிடைக்கும் சேவைகள் யாவை என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் உங்களுக்கு உதவுவதற்கான யோசனைகளை எம்மால் அளிக்க இயலும்.  

பின் வரும் விடயங்களில் எம்மால் உதவ இயலும்:  

 

தமிழ் மொழியிலுள்ள தகவல்கள் 

இந்தப் பக்கத்தின் மேல் வலது பக்க மூலையில் உள்ள ‘தெரிவுச் சின்னங்க’ளைப் (accessibility toolbar) பயன்படுத்தி பெரும்பான்மையான சமூக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள தகவல்களை எமது வலைத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம் அல்லது செவிமடுத்துக் கேட்கலாம். பார்வைத்-திறன் அல்லது செவித்-திறன் குறைபாடு அல்லது கற்றல் இயலாமை உள்ளவர்களுக்கும் இந்த ‘தெரிவுச் சின்னங்க’ளால் உதவ இயலும்.  

கீழேயுள்ள பட்டியலில் இருக்கும் மூலவளங்களில் பலவற்றின் NAATI அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்புகளும் எம்மிடம் உள்ளன.  

எம்முடன் [தமிழ்] மொழியில் தொடர்பு கொள்ளுங்கள் 

பின் வரும் வழிகளில் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் 

  • சமூக ஊடகங்கள் மூலமாய்ச் செய்தி அனுப்பல் 

  • எமக்கு மின்னஞ்சல் அனுப்பல் 

  • எம்மைத் தொலைபேசி மூலம் அழைத்தல் 

நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் உட்பட எவரொருவரும் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். இது அந்தரங்கமானதும் இலவசமானதும் ஆகும்.  

ஆங்கிலத்தில் பேச 13 11 20-ஐ அழையுங்கள்.  

13 14 50-இல் மொழி பெயர்த்துரைப்பாளர் ஒருவரைப் பயன்படுத்தி [தமிழ்] மொழியில் எம்முடன் பேசுங்கள்.  

நீங்கள் அழைக்கும் பொழுது உங்களுடைய மொழியின் பெயரைச் சொல்லுங்கள், பிறகு 13 11 20-இல் Cancer Council -ஐ அழைக்குமாறு மொழி பெயர்த்துரைப்பாளரைக் கேளுங்கள்.  

தனிநபர்களுக்கு மருத்துவ அறிவுரைகளை எம்மால் அளிக்க இயலாது.  

புற்றுநோய் குறித்த தகவல்கள் மற்றும் மூலவளங்கள்  (Cancer Information and Resources)

கீழ் வரும் தகவல்கள் NAATI அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளர்களால் தொழிலமை - ரீதியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உங்களுடைய நண்பர்களுடனும் , குடும்பத்தினருடனும் இந்தத் தகவல்களை நீங்கள் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம்.     

நீங்கள் தேடும் தகவல்கள் இங்கு இல்லையேல் , உதவிக்காக எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் .    

எளிதாக்கம் செய்யப்பட்ட மொழி அல்லது Easy Read ஆகியவற்றில் இருந்தும் மூலவளங்களை நீங்கள் வலையிறக்கம் செய்துகொள்ளலாம். இயலாமையுள்ளவர்கள், வயதானவர்கள, அல்லது கல்வியறிவில் ஆதரவுதவித் தேவைகள் உள்ளவர்களுக்கு இவை ஏற்றவையாகும் .    

பின் வரும் கோப்புக்களைப் பார்க்க ‘அடோபி ஆக்ரொபாட் ரீடர்’ எனும் மென்பொருள் உங்களுக்குத் தேவைப்படும். அதை இலவசமாக வலையிறக்கம் செய்யுங்கள்.

தமிழ்

English equivalents

புற்றுநோய் என்றால் என்ன? What is cancer?
சோர்வு மற்றும் புற்றுநோய் Fatigue and cancer
புற்றுநோய் யாராவது கவனித்து Caring for someone with cancer
பின்வரும் ஆதரவு சேவைகளை நீங்கள் உதவலாம் The following support services may assist you
கருப்பை வாய்ப் பரிசோதனை Cervical screening is a good way to stay healthy for you and your family